மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: புனர்பூசம்!

Published On:

| By Selvam

Margazhi Month Punarpoosam Natchathiram Rasi palan

-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால், தடைகள் தகரக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமை உணரப்படும். அதேசமயம் எல்லாம் தெரியும் என்ற எண்ணம் கூடவே கூடாது. மேலதிகாரிகள் ஒப்படைக்கும் பொறுப்பில் அலட்சியம் கூடாது.

உடனிருப்போரிடம் குத்தல் பேச்சும் குதர்க்கமும் கூடவே கூடாது. வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். உறவுகளிடம் விட்டுக்கொடுத்தல் முக்கியம்.

வாழ்க்கைத்துணையுடன் அன்யோன்யம் உண்டாகும்.. வாரிசுகளால் பெருமை உண்டு. அசையும், அசையா சொத்து சேரும். வழக்குகளில் நேரடி கவனம் முக்கியம்.

புதிய நட்புகளிடம் கவனமாகப் பழகுங்கள். தரல்,பெறலை உடனுக்குடன் குறித்து வையுங்கள்.

செய்யும் தொழிலில் உழைப்புக்கு ஏற்ப உயர்வு உண்டு. வர்த்தக அனுமதியைப் பெறுவதில் அலட்சியம் கூடாது.

அரசுத்துறையில் உள்ளோருக்கு உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும். பணி நேரத்தில் வீண் களியாட்டம் தவிருங்கள்.

அரசியல் சார்ந்தவர்களுக்கு ஆதரவு நீடிக்கும். மேலிடத்தின் பாராட்டு கிட்டும். மறைமுக எதிரிகளிடம் எச்சரிக்கை தேவை.

கலைஞர்கள், படைப்பாளிகள் திறமைக்கு ஏற்ப வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் பெற்றோர், ஆசிரியர் வழிகாட்டலைக் கேளுங்கள்.

பயணத்தில் உடைமைகள் பத்திரம். வளர்ப்புப் பிராணிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

தலைவலி, தூக்கமின்மை, கால்கள், பல் உபாதைகள் வரலாம். குருபகவான் வழிபாடு, குறைவிலா நன்மை சேர்க்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

5 கி.மீ தொலைவு ஓட்டம்… 30 விநாடியால்… ஆயுதப்படை போலீஸ் எடுத்த முடிவு!

தங்கம் விலை உயர்வு : இன்று எவ்வளவு தெரியுமா?

வேலைவாய்ப்பு: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பணி!

தமிழக மீனவர் பிரச்சனை : இலங்கை அதிபர் ஏகேடி – பிரதமர் மோடி சந்திப்பில் எடுத்த முடிவு என்ன?

2023-24-ம் ஆண்டில் எல்.ஐ.சியின் கோரப்படாத முதிர்வு தொகை இத்தனை கோடிகளா?

சிறைகளில் முறைகேடு: வழக்கு பதிவில் தாமதம் ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share