மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: பூரட்டாதி!

Published On:

| By Kavi

Margazhi Month Pooratathi Natchathiram Rasi Palan

-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

பலகால எதிர்பார்ப்புகள் பட்டென்று ஈடேறும் காலகட்டம். பணியிடத்தில் உங்கள் திறமை வெளிப்படும். இந்த சமயத்தில் தளராமல் உழைத்தால், எதிர்பார்த்த உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும்.

ADVERTISEMENT

உடனிருப்போர் யாரிடமும் தர்க்கம் தகராறு வேண்டாம். அனுபவம் மிக்கவர்கள் வார்த்தைகளை அவசியம் கேளுங்கள். வெளியூர் செல்லும் சமயத்தில் கோப்புகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.

இல்லத்தில் இனிமை சேரும். வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேசுங்கள். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியத்தடைகள் நீங்கும்.

ADVERTISEMENT

தேவையற்ற கடன் பெறவோ தரவோ வேண்டாம். பெற்றோர் வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள். ஆடை ஆபரணம், அசையும் அசையா சொத்து சேரும்.

செய்யும் தொழிலில் பொறுப்பு உணர்வுடன் செயல்படுங்கள். ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் தளர்ச்சி இல்லா உழைப்பு இருந்தால், வளர்ச்சி சீராகும். அயல் நாடுகளின் சட்டதிட்டங்களை மதியுங்கள்.

ADVERTISEMENT

அரசியலில் உள்ளவர்களின் வளர்ச்சி அதிகரிக்கும். மேலிடத்தின் ஆதரவு மகிழ்ச்சி தரும். அரசாங்கப் பணிபுரிவோர், அமைதியாகச் செயல்பட்டால் அதீத நன்மைகளைப் பெறலாம்.

படைப்பாளிகள் முழு முயற்சி இருந்தால், வாய்ப்புகளை தொடர்ச்சியாகப் பெறுவீர்கள். புதிய அறிமுகங்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம்.

மாணவர்கள், அதிகாலையில் எழுந்து படிப்பது அவசியம். வாகனப் பழுதை உடனுக்குடன் சீர் செய்யுங்கள்.

பற்கள், அடிவயிறு, மூட்டு வலி வரலாம். மகாலக்ஷ்மி வழிபாடு மங்களம் சேர்க்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: பூசம்!

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: புனர்பூசம்!

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: மிருகசீரிஷம்!

படுக்கை அறையையொட்டி இருந்த ஜெனரேட்டர்… ஜார்ஜியாவில் 11 இந்தியர்கள் பலி : பின்னணி என்ன?

‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் : தெலுங்கு தேசம் நிபந்தனையற்ற ஆதரவு!

ஆவின் அம்பத்தூர் பண்ணைக்கு ரூ.5.10 கோடி அபராதம்: எதற்காக?

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share