யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
குரோதி வருட மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: 16.12.2024 முதல் 13. 1.2025 வரை
பரணி
பொறுமையால் பெருமைபெற வேண்டிய காலகட்டம்.
அலுவலகத்தில் அவசரம் அலட்சியமான செயல்பாடுகள் கூடாது.
அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகளைக் கேளுங்கள்.எதிர்பாராத இடமாற்றம், பொறுப்பு மாறங்கள் வந்தால் வீண் சச்சரவின்றி ஏற்பதே நல்லது.
குடும்பத்தில் சீரான நன்மைகள் வரத்தொடங்கும். உறவுகள் யாரிடமும் வீண் வன்மம் வேண்டாம்.
பொறுமையாக இருந்தால் சுபகாரியங்கள் கைகூடும்.
கொடுக்கல் வாங்கலை முறைப்படுத்துங்கள். வாரிசுகளால் பெருமை உண்டு.
உறவுகளிடம் வீண் கண்டிப்பு தவிருங்கள்.
செய்யும் தொழிலில் முழுமையான ஈடுபாடு காட்டுங்கள்.
புதிய முதலீடுகளை அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனை கேட்டுச் செய்யுங்கள். அரசு, அரசியல் சார்ந்தவர்கள் பொறுமையாக இருப்பதே நல்லது.
கூடாநட்பை உடனே விலக்குங்கள்.
படைப்புத் துறையினர் முயற்சிகளுக்கு ஏற்ப வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
மாணவர்கள் மறதியை விரட்டுவது முக்கியம்.
இரவில் வாகனத்தை ஓட்டும் முன் முழுமையான ஓய்வு அவசியம்.
அடிவயிறு, உணவுக்குழாய், அல்சர் பிரச்னை வரலாம்.
பைரவர் வழிபாடு பசுமை சேர்க்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…