மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: ஆயில்யம்!

Published On:

| By Selvam

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: ஆயில்யம்!

-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

சிந்தித்து செயல்பட்டால் சீரான நன்மைகள் வரும் காலகட்டம். பணியிடத்தில் அவசரமும் அலட்சியமும் தவிருங்கள். பொறுப்புகளில் திட்டமிடல் முக்கியம். வீண் களியாட்டப் பேச்சுகளால் கவனச் சிதறல் ஏற்படலாம், கவனமாக இருங்கள்.

மேலதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். உடனிருப்போர் குறைகளை ஒருபோதும் பேசவேண்டாம்.

வீட்டில் நிம்மதி இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். பொது இடங்களில் குடும்ப விஷயம் பேசவேண்டாம்.

அக்கம்பக்கத்தினருடன் வீண் சச்சரவு தவிருங்கள். மூன்றாம் நபருக்காக உறவுகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். வரவை சேமிக்கப் பழகுங்கள்.

செய்யும் தொழிலில் உழைப்புக்கு ஏற்ப வளர்ச்சி ஏற்படும். பங்குவர்த்தகத்தில் அவசரம் கூடாது.

அரசு, அரசியல் சார்ந்தவர்கள் மேலிடத்துக்கு எதிரானவர்கள் நட்பை கனவிலும் நினைக்க வேண்டாம். பிறருக்கு ஜவாப், ஜாமீன் தருவதைத் தவிருங்கள்.

கலை, படைப்புத் துறையினருக்கு முயற்சிகள் முக்கியம். மாணவர்கள் கவனச் சிதறலைத் தவிருங்கள்.

பயணத்தில் உடைமைகள் பத்திரம். தலைவலி, தூக்கமின்மை, மன அழுத்தம் வரலாம். தியானம், யோகா நற்பலன் தரும். சுதர்சனர் வழிபாடு சுபிட்சம் தரும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தங்கம் விலை உயர்வு : இன்று எவ்வளவு தெரியுமா?

வேலைவாய்ப்பு: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பணி!

தமிழக மீனவர் பிரச்சனை : இலங்கை அதிபர் ஏகேடி – பிரதமர் மோடி சந்திப்பில் எடுத்த முடிவு என்ன?

2023-24-ம் ஆண்டில் எல்.ஐ.சியின் கோரப்படாத முதிர்வு தொகை இத்தனை கோடிகளா?

சிறைகளில் முறைகேடு: வழக்கு பதிவில் தாமதம் ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி!

பியூட்டி டிப்ஸ்: உதட்டு கருமை நீங்க… வீட்டிலேயே இருக்கு வழி!

ஹெல்த் டிப்ஸ்: எல்லாருக்கும் ஏற்றதா ஸ்கிப்பிங் பயிற்சி?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share