யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
குரோதி வருட மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: 16.12.2024 முதல் 13. 1.2025 வரை
அஸ்வினி:
அல்லவை விலகி நல்லவை அதிகரிக்கும் காலகட்டம். அதேசமயம், எதிலும் திட்டமிடல் நல்லது.
பணியிடத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். திட்டமிடலும் நேரடி கவனமும் இருந்தால் நன்மைகள் தொடரும்.
மேலதிகாரிகள் ஆதரவு மகிழ்ச்சி தரும். பதவி, ஊதிய உயர்வுகள் கைகூடிவரத் தொடங்கும்.
இல்லத்தில் நிம்மதி இடம்பிடிக்கும். வீடு, வாகனம் வாங்க, புதுப்பிக்க சந்தர்ப்பம் உண்டுஅசையும் அசையா சொத்து சேரும்.
வாரிசுகளால் யோகம் உண்டு.
சுபகாரியத் தடைகள் நீங்கும்.
வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் உருவாகும்.
செய்யும் தொழிலில் ஏற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் அவசரம் வேண்டாம்.
அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு வளர்ச்சி தொடர்ச்சி ஆகும்.
கூடா நட்பினால் வீண் பழிகள் வரலாம், கவனம் தேவை.
கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு அரசுவழிப் பாராட்டுகள் கிட்ட வாய்ப்பு உண்டு.
மாணவர்கள் சோம்பல் தவிர்த்தால் மதிப்பும் மதிப்பெண்ணும் உயரும்.
பயணத்தில் வேகம், வித்தைகாட்டல் வேண்டாம்.
காது,மூக்கு, தொண்டை, சளித் தொல்லைகள் வரலாம்.
ஈஸ்வரன் வழிபாடு இனிமை சேர்க்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…