நடிகர் மன்சூர் அலிகான் இன்று (நவம்பர் 23) காலை தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்று மீண்டும் புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளார். mansoor alikhan withdraw bail petition
நடிகை த்ரிஷா குறித்து பேட்டி ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு திரைபிரபலங்கள் தொடங்கி பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் இன்று நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியிருந்தது.
இந்நிலையில் இன்று காலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.
தொடர்ந்து ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் ஒரு கடித்தத்தை எழுதியிருந்தார் மன்சூர் அலிகான்.
அந்த கடிதத்தில், “தொடர் இருமல் காரணமாக 15 நாட்களாக குரல்வளை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சிகிச்சையில் இருந்து மீண்டு நாளை விசாரணைக்கு ஆஜராகிறேன்” என்று அவகாசம் கேட்டிருந்தார்.
இந்த கோரிக்கையை ஏற்ற ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையம் நாளை காலை 9 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக அவகாசம் வழங்கியிருந்தது.
இந்நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற மன்சூர் அலிகான் புதிய முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அப்போது தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்று விட்டு ஏன் புதிய மனுவை தாக்கல் செய்தீர்கள் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி கேள்வி எழுப்பினார்.
அதற்கு, “முன்னதாக தாக்கல் செய்த ஜாமீன் மனுவில் எதிர்மனுதாரராக ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு பதில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தை தவறுதலாக குறிப்பிட்டு விட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு நீதிபதி அல்லி, “நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம். நீதிமன்றம் விளையாட்டு மைதானம் இல்லை” என்று மன்சூர் அலிகானை கண்டித்துள்ளார்.
இந்நிலையில் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த புதிய முன் ஜாமீன் மனு நாளை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
இதனிடையே தனியார் தொலைக்காட்சிக்கு மன்சூர் அலிகான் அளித்த பேட்டியில்,
“நான் தலைமறைவாகவில்லை. சிலர் என் மீது வன்மம் தீர்ப்பதற்காக தொடர்ந்து எனக்கு போன் செய்து கொண்டிருந்தனர். மனுஷன் ஒரு நாளைக்கு எத்தனை போன்காலை எடுக்க முடியும்.
ஸ்விட்ச் ஆஃப் செய்தால், மன்சூர் அலிகான் தலைமறைவாகி விட்டார் என்று சந்தோஷப்படுகிறாரகள். பூட்டி வைத்திருந்த எனது ஆஃபீஸை போட்டோ எடுத்து போட்டு மன்சூர் அலிகான் தலைமறைவு என்று கூறுகிறார்கள். mansoor alikhan withdraw bail petition
தமிழ்நாட்டில் எத்தனை பிரச்சனை இருக்கிறது. ஆனால் இந்த மத்திய அரசு ஆட்களை வைத்து திசைத்திருப்புகிறது. நான் எதற்காக தலைமறைவாக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
தமிழகத்திற்கு நீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை!
