புதிய அவதாரமெடுக்கும் மனோஜ் பாரதிராஜா

By christopher

|

Published on 24 Mar 2023, 9:56 PM

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.

புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் இமையம்’ பாரதிராஜா நடிக்க உள்ளார்.

ADVERTISEMENT

பாரதிராஜாவும் அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவும் இணையும் இப்படத்தை தனது வெண்ணிலா புரொடக்க்ஷன்ஸ் பேனரில் தயாரிப்பது குறித்து இயக்குநர் சுசீந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கும்.

ADVERTISEMENT

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் முதல் பார்வையை மார்ச் 31-ம் தேதியன்று தமிழ் சினிமாவின் 10 முன்னணி இயக்குநர்கள் வெளியிட உள்ளார்கள்.

பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மஹால்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், தான் இயக்குநராக அறிமுகமாகும் முதல் படத்திலேயே தனது தந்தையை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து மனோஜ் பாரதிராஜா மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

ADVERTISEMENT

இயக்குநராக தனது முதல் படத்தை தயாரிப்பதற்காக சுசீந்திரனுக்கு நன்றி தெரிவித்துள்ள மனோஜ் பாரதிராஜா, இயக்குநர் மணிரத்னத்திடம் பம்பாய் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது. அதனையொட்டி அவரை சந்தித்து ஆசி பெற்றார்.

“அனைவரும் ரசித்து பாராட்டும் வகையில் இத்திரைப்படம் உருவாகும். இசைக்கு முக்கியத்துவம் கொண்ட இக்கதையில் ஜி.வி.பிரகாஷின் பாடல்களும், பின்னணி இசையும் முக்கிய பங்காற்றும்” என்று படத்தை இயக்கும் மனோஜ் பாரதிராஜா கூறியுள்ளார்.

இராமானுஜம்

பெண்களுக்கு ஆயிரம் ரூபாயும் தேவையில்லை; ஓசி பஸ்ஸும் தேவையில்லை” – இயக்குநர் பேரரசு

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இடமில்லை! – சட்டமன்றத்தில் போட்டு உடைத்த கே.பி.முனுசாமி

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

christopher

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel