பாரதி இருந்திருந்தால் மோடியை போற்றி பாடியிருப்பார் என்று தமிழிசை கருத்து தெரிவித்திருந்த நிலையில் இந்த கொடுமைக்காரர்களை பார்த்தால் பாரதி அழுதுவிடுவார். இவர்களை பாடவும் மாட்டார், பாராட்டவும் மாட்டார் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா வளாகத்தில் 5 துறைகள் சார்ந்த கண்காட்சியை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
பாரதி இருந்திருந்தால் மோடியை போற்றி பாடியிருப்பார் என்று தமிழிசை கூறியதற்கு மனோ தங்கராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பாரதியார் பாடியது வேறு. வேதியர் ஆயினும் ஒன்றே… இங்கு வேறு குலத்தவராயினும் ஒன்றே… இங்கு அது நடக்கிறதா? அந்த தர்மம் இந்த தர்மம் எனக் கூறி பெண்களை வீட்டில் அடைக்க பார்க்கிறீர்கள்.
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றவர் பாரதி. இந்த கொடுமைக்காரர்களை பார்த்தால் பாரதி அழுதுவிடுவார். இவர்களை பாடவும் மாட்டார், பாராட்டவும் மாட்டார்.
பாஜகவினர் என்ன செய்ய வேண்டும் என்பதை பாரதி ஏற்கனவே பாடி வைத்துள்ளார். தமிழிசை போன்றவர்களை இதை பார்க்கச் சொல்லி, படிக்க சொல்லி, மோடியிடம் போய் சொல்லச் சொல்ல வேண்டும். மத வேறுபாடு போன்ற மடமையை கொளுத்த வேண்டும் என்று தான் பாரதி பாடியுள்ளார்” என்று மனோ தங்கராஜ் சுட்டிக்காட்டினார்.
மேலும், நாட்டில் உள்ள பசி, பட்டினி, படிக்க முடியாத பிள்ளைகள், கஷ்டத்தில் இருக்கும் விவசாயிகள் போன்றவற்றை பேசி விவாத பொருளாக கொண்டு வர வேண்டும். ஆனால் இவர்கள் இதையெல்லாம் விட்டுவிட்டு விளக்கு கொளுத்த வேண்டும் என்கிறார்கள்
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், “பாஜக என்றால் பொய்.. பொய் என்றால் பாஜக… பொய் மூட்டைகளை உருட்டி விட்டார்கள். ஆனால் அவை உருளவில்லை.
தீபமே ஏற்றவில்லை என கூறிய பொய்யை அம்பலப்படுத்த வேண்டும்”
திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாக ஏற்றும் முறைப்படி தீபம் வைத்துவிட்டார்கள். மக்கள் பார்த்து விட்டார்கள். பாஜகவினர் அரசியல் செய்வதற்காக பிரச்சனை செய்ய முயற்சித்தார்கள்.” என்று காட்டமாக தெரிவித்தார்.
