தேசப்பற்று குறித்து வாய் திறக்கலாமா? – நயினார் நாகேந்திரனுக்கு மனோ தங்கராஜ் கேள்வி!

Published On:

| By Selvam

Mano thangaraj condemned nainar nagendran

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளிப்படையாக வெறுப்பரசியல் பேசி வருகிறார் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று (மே 17) குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜக சார்பில் திருப்பூரில் நேற்று (மே 16) ஆபரேஷன் சிந்தூர் வெற்றிப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். Mano thangaraj condemned nainar nagendran

இந்த கூட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், “தேச உணர்வோடு இருங்கள், இல்லையென்றால் பாகிஸ்தானுக்கு சென்று விடுங்கள். காங்கிரஸ் முதல்வர் கூட பாகிஸ்தானை எதிர்க்கிறார். ஆனால், தமிழக முதல்வர் எந்தவிதமான பதிலும் கூறவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

நயினார் நாகேந்திரனின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,

“நயினார் நாகேந்திரன் இப்படி பேசுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். பாஜக தலைவர் ஆனதும் சாதி வெறியும், மத வெறியும் அவருள் குடிபெயர்ந்துள்ளது.

இதனால் வெளிப்படையாகவே தொடர்ந்து வெறுப்பரசியல் பேசி வருகிறார். இதனால் அவருக்கான அடையாளத்தை நயினார் இழந்து விட்டார். Mano thangaraj condemned nainar nagendran

1500 ஆண்டுகள் இந்திய மண்ணை ஆக்கிரமித்திருந்த மனுஸ்மிருதியும், பாஜகவின் மூதாதையர்களான இந்து மகாசபா, ஆர்.எஸ்.எஸ். போன்ற மதவெறி அமைப்புகளின் இந்து ராஷ்ட்ரா முழக்கமும் தான் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்குக் காரணம்.

பிரிட்டிஷாரிடம் ஓய்வூதியம் வாங்கிக் கொண்டு தங்கள் வயிற்று பிழைப்பை ஆற்றியவர்களின் வாரிசுகள், நாட்டுப்பற்று குறித்து பேசுவது, “சாத்தான் வேதம் ஓதும்” கதை.

தேசப்பிதாவை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகளின் வாரிசுகள் தேசப்பற்று குறித்து வாய் திறக்கலாமா? சுமார் 1500 ஆண்டுகள் இந்தியாவின் 80 சதவீதம் மக்களை மாடுகளாகக் கூட மதிக்காமல் மனுஸ்மிருதி என்னும் கொடிய நச்சுப்பாம்பை உலாவவிட்டு, பாமர மக்களின் இரத்ததை உறிஞ்சி உல்லாச வாழ்க்கை வாழ்ந்த கோழைகளின் வழியை பின்பற்றுபவர்களுக்கு திடீர் மக்கள் பற்றும், நாட்டுப் பற்றும் வருவது – Patriotism is the last refuge for a Scoundrel என்பதை தெளிவுபடுத்துகிறது.

பிரிட்டிஷாரின் கால்பாதம் தொட்டு தவழ்ந்து மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து சிறையில் இருந்து வெளிவந்த தங்களின் கொள்கை மூதாதையர்கள் வழியில் வந்தவர்கள், இப்போது அமெரிக்க அதிபரின் அடிவருடிகளாக மாறி, நாட்டின் இறையாண்மையை கேலிக்கூத்தாக்கி உள்ளது, ஒட்டுமொத்த இந்தியர்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார். Mano thangaraj condemned nainar nagendran

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share