நயன்தாரா நடித்துள்ள மண்ணாங்கட்டி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளியான அன்னபூரணி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதனை தொடர்ந்து பிளாக்ஷீப் யூடியூப் பிரபலம் டியூட் விக்கி இயக்கத்தில் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி அறிவிப்பு வெளியானது.
இதுதொடர்பாக படக்குழு வெளியிட்ட வீடியோவில், கல்வெட்டு, சில்லறை நாணயங்கள், ராக்கெட் வடிவிலான 500 ரூபாய் தாள் ஆகியவை காட்டப்பட்டது. இது வித்தியாசமாக இருந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எழுந்தது.
மண்ணாங்கட்டி படத்தில் யோகி பாபு, தேவ தர்ஷினி, கெளரி கிஷன், நரேந்திர பிரசாத் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.
ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. மண்ணாங்கட்டி படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கியது.
இந்தநிலையில், படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதை ஒட்டி நடிகை நயன்தாரா படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
இந்த புகைப்படங்களை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
விரைவில் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…