முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் இன்று (டிசம்பர் 26) காலமானார்.
இந்நிலையில் மன்மோகன் சிங் உடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங்கை இழந்துவிட்டது. எளிமையான பின்புலத்தில் இருந்து வந்து பொருளாதார நிபுணராக உயர்ந்தார்.
அவர் நிதியமைச்சர் உட்பட பல்வேறு அரசு பதவிகளில் பணியாற்றினார். நமது பொருளாதாரக் கொள்கையில் வலுவான முத்திரையை பதித்தார். பிரதமராக, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த விரிவான முயற்சிகளை மேற்கொண்டார்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா