ஒருவழியாக ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ OTT ரிலீஸ் தேதி வெளியானது!

Published On:

| By Manjula

ஒரு திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆவதற்கு தமிழ் ரசிகர்கள் இவ்வளவு காத்துக் கிடந்ததே இல்லை. அப்படி தமிழ் சினிமா ரசிகர்களை காக்க வைத்திருக்கிறது ‘மஞ்சுமெல் பாய்ஸ்’.

மலையாளத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் சக்கை போடு போட்ட திரைப்படம் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’. மிகக் குறைந்த பொருட்செலவில் உருவான போதிலும் வசூல் வேட்டை செய்துள்ளது.

கொடைக்கானலில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவான இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை ரூபாய் 250 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது படத்தின் மொழி தான். காரணம் இன்னும் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ தமிழில் டப்பிங் செய்யப்படவில்லை. சில திரையரங்குகளில் சப் டைட்டிலுடன் படம் ஓடியது.

படத்தில் ஆங்காங்கே தோன்றிய தமிழ் வசனங்கள் மூலம் ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது. என்றாலும் முழுவதுமாக  படத்தை தமிழில் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

முன்னதாக ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதியே டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. ஆனால் ரிலீஸ் தள்ளி போனது.

இந்நிலையில் மஞ்சுமெல் பாய்ஸ் OTT-யில் ரிலீஸ் ஆகும் தேதி தற்பொழுது வெளியாகி உள்ளது. அதன்படி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வருகிற மே மாதம் 3-ம் தேதி வெளியாக உள்ளது.

இதையறிந்த ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பிரியங்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வாக்கு எண்ணிக்கை முடியும் வரை… நிர்வாகிகளுக்கு எடப்பாடி அறிவுறுத்தல்!

‘குக் வித் கோமாளி’ ஆரம்ப தேதி வெளியானது… செம குஷியில் ரசிகர்கள்…!

அமைச்சர் மகன் கார் உடைப்பால் பதற்றம்…பாமகவினர் மீது புகார்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share