மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநர் கதைக்கு ஓகே சொன்ன தனுஷ்?

Published On:

| By Selvam

Director Chidambaram Team up with Dhanush's D54

பிரபல மலையாள நடிகர் சௌபின் ஷாஹிர் தயாரித்து நடித்த மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் கேரளாவில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. இந்த படத்தை சிதம்பரம் இயக்கியிருந்தார்.

மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தில் நடிகர் சௌபின் ஷாஹிர் உடன் இணைந்து ஶ்ரீநாத் பாஷி, பாலு வர்கீஸ், உட்பட பல நடிகர்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ADVERTISEMENT

இந்த படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். 5 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்த படம், 100 கோடி ரூபாய் வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் உருவான “கண்மணி அன்போடு காதலன்” என்ற பாடலை மிக புத்திசாலித்தனமாக இயக்குநர் சிதம்பரம் பயன்படுத்திய முறை தான் தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் பட்டியலில் இந்த படம் இடம் பிடிக்க காரணம்.

ADVERTISEMENT

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் ஓய்ந்த பாடில்லை.

இந்தப் படத்தை பார்த்த நடிகர் கமல் ஹாசன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் விக்ரம், நடிகர் தனுஷ் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் இயக்குநர் சிதம்பரம் மற்றும் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினர்.

ADVERTISEMENT

இந்நிலையில், நடிகர் தனுஷை நேரில் சந்தித்த இயக்குநர் சிதம்பரம், தனுஷூக்கு ஏற்ற ஒரு கதையை அவரிடம் கூறியதாகவும் அந்த கதைக்கு நடிகர் தனுஷ் ஓகே சொல்லிவிட்டார் என்றும் தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷின் 54 வது படத்தை இயக்குநர் சிதம்பரம் இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் தனுஷ் தற்போது தான் இயக்கி நடித்துள்ள தனது 50 வது படமான “ராயன்” படத்தின் இறுதி கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

அதேபோல் அவர் இயக்கத்தில் உருவாகும் மற்றொரு படமான “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” படத்திலும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

மேலும் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் D 51 படத்திலும் தனுஷ் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் ராட்சசன் படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருந்தார். ஆனால், தற்போது இயக்குநர் ராம்குமார் அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேலைவாய்ப்பு: NIOT நிறுவனத்தில் பணி!

ஹெல்த் ஸ்பெஷல்: டிரெண்டாகும் `வஜைனல் ஸ்டீமிங்’… நன்மையா? தீமையா?

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: பச்சை மிளகாய் ஊறுகாய்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share