manjummel boys box office collections
மலையாளத்தில் வெளியான ‘மஞ்சுமேல் பாய்ஸ்’ திரைப்படம் வசூலில் மேலும் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது.
கொடைக்கானல் குணா குகையில் கடந்த 2௦௦2-ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியான படம் ‘மஞ்சுமேல் பாய்ஸ்’. கடந்த பிப்ரவரி மாதம் 22-ல் வெளியான இப்படம் மலையாளத்தில் கிடைத்த பெரும் வரவேற்பால் தமிழ்நாட்டிலும் வெளியானது.
விபத்தில் சிக்கிய ‘சைத்தான்’ நடிகை… தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
படத்தின் இரண்டாம் பாதி வசனங்கள் தமிழில் இருந்ததாலும் ‘குணா’ படத்தின் ‘கண்மணி அன்போடு’ பாடல் படத்தில் பதிவு செய்யப்பட்ட விதத்தாலும், டப்பிங் எதுவுமின்றி தமிழ்நாட்டிலும் இப்படம் நல்ல வசூலைக் குவித்து வருகிறது.
குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 5௦ கோடி வசூலை இப்படம் தொட்டுள்ளது. தமிழ் அல்லாத ஒரு படம் தமிழ்நாட்டில் ரூபாய் 5௦ கோடியை வசூல் செய்துள்ளது இதுவே முதல்முறை ஆகும்.
இதனால் இயக்குநர் சிதம்பரம் உட்பட இப்படத்தில் நடித்த அனைவரின் மீதும் இப்படம் மிகப்பெரிய வெளிச்சத்தை பாய்ச்சியுள்ளது.
Kanguva டீசர் ரெடி… Sizzle இதற்கான அர்த்தம் என்ன?
இந்தநிலையில் உலகம் முழுவதும் ‘மஞ்சுமேல் பாய்ஸ்’ திரைப்படம் ரூபாய் 2௦௦ கோடியை வசூலித்து புதிய வரலாற்று சாதனை படைத்திருக்கிறது.
அதோடு ரூபாய் 2௦௦ கோடி கிளப்பில் இணைந்த முதல் மலையாளப் படம் என்கிற பெருமையையும் ‘மஞ்சுமேல் பாய்ஸ்’ படம் பெற்றுள்ளது.
Record Breaking : #ManjummelBoys – FIRST MALAYALAM film to enter into ₹200Cr club💰🤩#Chidambaram | #GunaCave pic.twitter.com/tnheWJf6W9
— Tharani ᖇᵗк (@iam_Tharani) March 19, 2024
தற்போது படக்குழு இதுகுறித்த தங்களுடைய மகிழ்ச்சியினை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டுள்ளனர். இதைப்பார்த்து ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் படக்குழுவினரை போட்டிபோட்டு பாராட்டி வருகின்றனர்.
‘மஞ்சுமேல் பாய்ஸ்’ வெளியாகி மொத்தம் 27 நாட்களிலேயே, பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரும் வரலாற்று சாதனைகளை படைத்துள்ளது. இதற்கு கூட்டம், கூட்டமாக திரையரங்குகளுக்கு படையெடுத்து, 2கே கிட்ஸ் கொடுத்த மிகப்பெரிய ஆதரவும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“சொந்த மக்களுக்குத் துரோகம்” : பாஜக -பாமக கூட்டணி குறித்து திருமா பேட்டி!
சிதம்பரம், விழுப்புரம் வேட்பாளர்கள் : திருமாவளவன் அறிவிப்பு!
IPL 2024: இதுக்கு பருத்திமூட்டை ‘குடோன்லேயே’ இருந்துருக்கலாம்… கிண்டலடிக்கும் ரசிகர்கள்!
manjummel boys box office collections