‘காதல் கைகூடியது’ மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகரை மணக்கும் டாடா ஹீரோயின்!

Published On:

| By Manjula

மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் தீபக் பரம்போல் (35), டாடா ஹீரோயின் அபர்ணா  தாஸ் (28) இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர்.

வினீத் ஸ்ரீனிவாசனின் ‘மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்’ படத்தின் வழியாக மலையாள திரையுலகில் அறிமுகமானவர் தீபக் பரம்போல். தொடர்ந்து தட்டத்தின் மறையத்து, கேப்டன், மனோஹரம், கண்ணூர் ஸ்குவாடு என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

ADVERTISEMENT

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்து, வசூலிலும் பல்வேறு புதிய சாதனைகளை படைத்து வருகிறது.

ADVERTISEMENT

மறுபுறம் நடிகை அபர்ணா தாஸ் பஹத் பாசிலின் நிஜன் பிரகஷன் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து விஜயின் பீஸ்ட் படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்து தமிழிலும் அறிமுகமானார்.

கடந்த ஆண்டு கவின்-அபர்ணா தாஸ் நடிப்பில் வெளியான டாடா படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டடித்து இருவருக்கும் பிரேக் கொடுத்தது. இதேபோல தெலுங்கில் ஆதிகேசவா என்னும் படத்திலும் அபர்ணா  நடித்திருந்தார்.

ADVERTISEMENT

சமீபத்தில் வெளியான சீக்ரெட் ஹோம் தான் அபர்ணா நடிப்பில் கடைசியாக வெளியான படமாகும். இந்த நிலையில் தீபக் பரம்போல் – அபர்ணா தாஸ் இருவரும் திருமண பந்தத்தில் இணையவுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

வருகின்ற ஏப்ரல் 24-ம் தேதி கேரளாவின் வடக்கன்சேரியில் அபர்ணா-தீபக் திருமணம் நடைபெறவுள்ளது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது. ‘மனோஹரம்’ படத்தில் இணைந்து நடித்தபோது மலர்ந்த காதல் தற்போது திருமணத்தில் வந்து முடிந்துள்ளது.

-மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

GOLD RATE: வீழ்வேனென்று நினைத்தாயோ… உச்சம் தொட்டது தங்கம்!

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மோடி சூறாவளி பிரச்சாரம்!

தேர்தல் அதிகாரிக்கு கொலை மிரட்டல் : எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share