புதிதாக அச்சடிக்கப்படும் இந்திய ரூபாய் நோட்டுக்களில் அம்பேத்கர் புகைப்படத்தை அச்சிட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் பஞ்சாப் மாநில நாடாளுமன்ற உறுப்பினருமான மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.
நேற்று, (அக்டோபர் 26) டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், புதிதாக அச்சிடப்படும் இந்திய ரூபாய் நோட்டுக்களில் லக்ஷ்மி தேவி மற்றும் விநாயக பெருமான் படங்களை அச்சிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுத உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இந்தோனேசியா போன்ற ஒரு முஸ்லீம் நாட்டில் ரூபாய் நோட்டுகளில் விநாயக பெருமானின் புகைப்படத்தை அச்சிடும்போது, ஏன் இந்தியாவில் தெய்வங்களின் புகைப்படத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சிட முடியாது? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அரவிந்த் கெஜ்ரிவால் கருத்துக்கு எதிர்வினையாக, புதிதாக அச்சடிக்கப்படும் இந்திய ரூபாய் நோட்டின் ஒரு பக்கம் சுதந்திர போராட்ட வீரர் மகாத்மா காந்தியின் புகைப்படமும், மற்றொரு பக்கம் அம்பேத்கரின் புகைப்படமும் இடம்பெற வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் கருத்தை மேற்கோள் காட்டி, மணீஷ் திவாரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “புதிதாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுக்களில் பாபாசாகேப் அம்பேத்கர் புகைப்படத்தை ஏன் அச்சிடக்கூடாது?.
ஒரு பக்கம் அம்பேத்கர் புகைப்படத்தையும் மற்றொரு பக்கம் மகாத்மா காந்தியின் புகைப்படத்தையும் அச்சிட வேண்டும்.
இதனால், வன்முறையற்ற, அரசியலமைப்பு, சமத்துவம் நிறைந்த ஒரு தனித்துவமான ஒன்றியத்தை கட்டியெழுப்பிய மாமேதைக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
செல்வம்
மத்திய அரசால் தான் இலங்கை கடற்படை அத்துமீறுகிறது: அன்புமணி ராமதாஸ்
