மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி மாநில முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 9) ஜாமீன் வழங்கியுள்ளது.
புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி மூத்த தலைவரும், டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியாவை கடந்த 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. இதனையடுத்து தனது துணை முதல்வர் பதவியை சிசோடியா ராஜினாமா செய்தார்.
பின்னர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மணிஷ் சிசோடியா மதுபான ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கிலும் கைது செய்யப்பட்டார்.
இந்த இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், மணிஷ் சிசோடியாவுக்கு அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ என இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் வழங்கி நீதிபதிகள் இன்று உத்தரவிட்டனர்.
மேலும், ரூ.2 லட்சம் பிணைத்தொகை செலுத்த உத்தரவிட்ட நீதிபதிகள், “எந்த ஒரு வழக்கிலும் விரைவான விசாரணை நடைபெற வேண்டும். ஆனால் சிசோடியா வழக்கில் விரைவான விசாரணை நடைபெறவில்லை. இது அவரது உரிமையை மீறுவதாகும்” என்று தெரிவித்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
நகைப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்… ஒரேடியாக உயர்ந்த தங்கம் விலை!