கமல்ஹாசன் – மணிரத்னம் இணைந்துள்ள தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதனையடுத்து படத்திற்கான பிரோமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். maniratnam reply on again join hands with rajini
இந்த நிலையில் நாயகன் படத்திற்கு பின்னர் 38 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் – மணிரத்னம் இணைந்தது போன்று, தளபதி படத்தை அடுத்து 35 ஆண்டுகளுக்கு பின்னர் மணி ரத்னம் – ரஜினிகாந்த் மீண்டும் இணைவார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தற்போது தக்லைஃப் படத்திற்காக பேட்டியளித்து வரும் இயக்குநர் மணிரத்னத்திடம், ‘மீண்டும் ரஜினியுடன் இணைந்து படம் எடுப்பீர்களா?’ என்ற கேள்வியை தொகுப்பாளர் கோபிநாத் எழுப்பினார்.
கண்டிப்பாக அவரிடம் கேட்பேன்.. ஆனால்!
அதற்கு மணி ரத்னம், “அதுகுறித்து ரஜினியிடம் கேட்க வேண்டும். அவருக்கு ஏற்றமாதிரி கதையும், நேரமும் இருந்ததும் என்றால் கண்டிப்பாக அவரிடம் கேட்பேன். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்த உச்ச நட்சத்திர நடிகருக்கு ஏற்ற தீனி இருக்க வேண்டும். சாதாரண ஸ்கிரிப்ட் வைத்துக்கொண்டு அவ்வளவு பெரிய ரசிகர்களை வைத்துள்ள நடிகரை அணுக முடியாது.
எனவே, இதுவரை அவர் பண்ணாத கதைகளை எடுக்க வேண்டும், அதே சமயம் அவருடைய மார்க்கெட்டையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்த பேலன்ஸ் ஒரு இயக்குநராக எனக்கு வேண்டும்” என மணிரத்னம் தெரிவித்தார்.