தக் லைஃப் அப்டேட் : வெளிநாடு சென்ற மணிரத்னம்

Published On:

| By Selvam

கமல் ஹாசனின் KH 234 படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்குகிறார். இந்த படத்திற்கு தக் லைஃப் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 36 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம் – கமல் கூட்டணி இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தக் லைஃப்  படத்திற்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கின்றார். கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தக் லைஃப் படத்தை தயாரிக்கிறது.

ADVERTISEMENT

இந்த படத்தில் நடிகை த்ரிஷா, நடிகர் துல்கர் சல்மான், நடிகர் ஜெயம் ரவி, நடிகர் கௌதம் கார்த்திக், நடிகர் ஜோஜூ ஜார்ஜ், நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இணைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த படத்தில் இருந்து நடிகர் துல்கர் சல்மான் விலகிக் கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக உருவாகும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டதாக படக்குழுவினர் வீடியோ வெளியிட்டு அறிவித்தனர். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஐந்து நாட்கள் நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக லொகேஷன் பார்க்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.

தற்போது இயக்குநர் மணிரத்னம் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பிற்கான லொகேஷன் பார்ப்பதற்காக செர்பியாவிற்கு சென்று உள்ளார்.

ADVERTISEMENT

அங்கு படக்குழுவினருடன் இயக்குநர் மணிரத்னம் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கமலஹாசன் நடிப்பில் இந்தியன் 2, கல்கி 2898AD ஆகிய படங்கள் இந்த ஆண்டு வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேலைவாய்ப்பு: NIOT நிறுவனத்தில் பணி!

ஹெல்த் ஸ்பெஷல்: டிரெண்டாகும் `வஜைனல் ஸ்டீமிங்’… நன்மையா? தீமையா?

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: பச்சை மிளகாய் ஊறுகாய்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share