“ஸ்டாலினிடம் கேளுங்கள்” : தங்கம் தென்னரசுவுக்கு அதிமுக கண்டனம்!

Published On:

| By Kavi

manipur violence AIADMK condemns minister thangam thennarasu

அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

மணிப்பூர் சம்பவத்துக்கு நாடு முழுவதிலும் இருந்து கண்டனங்கள் வலுத்து வருகிறது. இதற்குத் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று ட்விட்டர் வாயிலாகக் கண்டனம் தெரிவித்திருந்தார்,

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று (ஜூலை 22) செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,  “மணிப்பூர் சம்பவத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவிக்காதது ஏன்? நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். ஆனால் அதிமுக இரட்டை வேடம் போடுகிறது” என்று கூறியிருந்தார்.

இதற்கு அதிமுக தலைமை கண்டனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதுதொடர்பான ட்விட்டர் பதிவில், “‘இந்த விடியா முதல்வரின்’ ஆட்சியில் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை யாரும் பொய் பிரச்சாரம் செய்யத் தயங்குவதில்லை ,மணிப்பூர் குறித்து எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் நேற்றே தனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துவிட்ட நிலையில், எதிர்கட்சித் தலைவர் மணிப்பூர் குறித்துப் பேசவே இல்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருப்பது மிக மோசமான ஏமாற்று வேலை ! இந்த சமுகவலைதள யுகத்தில் கோமாளித்தனமானதும் கூட…!

நடப்பது பொம்மை முதல்வரின் சர்க்கஸ் அரசு தான் என்பதை நித்தம் ஒரு அமைச்சர் உறுதி செய்வதற்கு நன்றி!

ADVERTISEMENT

அது சரி…, மணிப்பூர் குறித்து கழகப் பொதுச்செயலாளர் பேசினாரா என கேள்வி கேட்பவர்கள், மேகதாது அணை கட்ட ஆயத்த பணிகளைச் செய்து கொண்டிருக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசையோ , தன் பக்கத்தில் உட்கார்ந்து மகிழ்ந்து குலாவிய டி.கே.சிவக்குமாருக்கு எதிராகவோ மு.க.ஸ்டாலின் இதுவரை வாய்திறக்காதது ஏன் என்று கேள்வி கேட்பார்களா?” என அதிமுக தலைமை கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரியா

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!

“60 கோடி பெண்களையும் அவமதித்துவிட்டார் மோடி”: மகிளா காங்கிரஸ் போராட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share