மானிக்கா பத்ரா தலைமையிலான இந்தியப் பெண்கள்டேபிள் டென்னிஸ் அணி ரொமேனியாவை 3-2 கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது. table tennis india quarterfinal
அணியாக விளையாடும் பொழுது, ஒவ்வொரு அணியிலும் 3 விளையாட்டு வீரர்கள் இடம்பெறுவார்கள். 4 சிங்கிஸ் ஆட்டம் மற்றும் 1 டபிள்ஸ் ஆட்டம் என மொத்தமாக விளையாடப்படும். இதில் மூன்று ஆட்டங்களை வென்றால் அவர்கள் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்கள்.
இந்திய அணியில் மானிக்கா பத்ரா, ஶ்ரீஜா அகுலா மற்றும் அர்ச்சனா காமத் இடம்பெற்றார்கள்.
டபிள்ஸ் அட்டத்தில் விளையாடிய அர்ச்சனா மற்றும் ஸ்ரீஜா குழு, 11-5, 12-10, 11-7 என்ற நேர் செட்களில் ரோமேனியாவின் அடினா மற்றும் எலிசபெத்தாவை வீழ்த்தியது. table tennis india quarterfinal
அடுத்த சிங்கில்ஸ் அட்டத்தை விளையாடிய மானிக்கா பத்ரா, பெர்னாடெட்டை 11-5,11-7,11-7 என்ற கணக்கில் சுலபமாக வென்றார்.
ஆனால் அடுத்தடுத்து இரண்டு சிங்கில்ஸ் ஆட்டங்களில் இந்தியா தோற்றது. ஸ்ரீஜா 3-2 என்ற கணக்கில், அர்ச்சனா 3-1 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவினர்.
ஆனால் இறுதிப் போட்டியில், மானிக்கா பத்ரா ரொமேனியாவின் அடினாவை 11-5,1 11-9, 11-9 என்ற நேர் செட்களில் வென்று இந்திய அணியைக் காலிறுதிக்கு அழைத்து சென்றார்.
இந்தியா இந்த ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்துகொண்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
செந்தில் பாலாஜி வழக்கு : இப்படி கேட்பது சரியல்ல – ED மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி!