பைசன் படத்துக்கும் மாரி செல்வராஜுக்கும் பலவேறு துறையைச் சேர்ந்தவர்கள் பாராட்டுத் தெரிவித்து வருகிறார்கள். அரசியல் கட்சி பேதமின்றி அனைத்து தலைவர்களும் படத்தை பார்த்து பாராட்டி தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல திரைத்துறையை சார்ந்த இயக்குனர்கள், கலைஞர்கள் என பலரும் பைசன் படத்தை பார்த்து விட்டு பாராட்டுகிறார்கள்.
ரஜினிகாந்த், அப்புறம் பாஜக அண்ணாமலை, முதல்வர ஸ்டாலின் என்று பலரும் பாராட்டியிருக்கும் நிலையில் அத்தி பூத்தது போல, இயக்குனர் மணிரத்னமும் படத்தைப் பார்த்து விட்டுப் பாராட்டி இருக்கிறார்.
“மாரி… ! படத்தை இப்போதுதான் பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது. நீதான் அந்த பைசன், உன் படைப்பை கண்டு பெருமை கொள்கிறேன், இதைத் தொடர்ந்து செய், உன் குரல் முக்கியமானது” என்று அவர் கூறி இருக்கும் வார்த்தைகள் முக்கியமானவை. பொருள் பொதிந்தவை. புரிந்தால் சரி.
-ராஜ திருமகன்
