மாம்பழம் சின்னம்: ராமதாஸ் ரிட் மனு மீது பிப்.2-ல் உயர்நீதிமன்றம் விசாரணை

Published On:

| By Mathi

Ramadoss PMK

 

மாம்பழம் சின்னம் தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தாக்கல் செய்த ரிட் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் பிப்ரவரி 2-ந் தேதி விசாரிக்கிறது.

ADVERTISEMENT

சென்னை உயர்நீதிமன்றத்தில் டாக்டர் ராமதாஸ் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 2026 தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் பாமகவுக்கு மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது; இது தொடர்பான கடிதத்தை இந்திய தேர்தல் ஆணையம் தமது முகவரிக்கு அனுப்பாமல் மகன் அன்புமணி ராமதாஸ் முகவரிக்கு அனுப்பி விட்டது.

தேர்தல் ஆணையத்திடம் அன்புமணி ராமதாஸ் கொடுத்திருப்பவை பொய்யான ஆவணங்கள். ஆகையால் மாம்பழம் சின்னத்தை ஒதுக்கீடு செய்த உத்தரவை தமக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுப்ப உத்தரவிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி இருந்தார்.

ADVERTISEMENT

இம்மனுவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி அருள் முருகன் பெஞ்ச் பிப்ரவரி 2-ந் தேதி விசாரிக்க உள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share