சிறந்த அறிமுக இயக்குனர், சிறந்த வசனம்: கவனத்தை ஈர்த்த மண்டேலா!

சினிமா

சிறந்த அறிமுக இயக்குனர், சிறந்த வசனத்திற்கான இரண்டு விருதுகள் மண்டேலா திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகிபாபு – ஷீலா ராஜ்குமார் நடித்த ‘மண்டேலா’ படம் மக்களிடையே  சிறப்பான வரவேற்பை பெற்றது.

சூரங்குடி என்ற கிராமத்தில் நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில், வெற்றிபெறுவதற்கு ஒரு வாக்கு தேவைப்படும் நிலையில் அந்த ஊரில் உள்ள முடிதிருத்துபவரான மண்டேலாவின் (யோகிபாபு) வாக்கு மிக முக்கியமானதாக உருவெடுக்கிறது. அவரது வாக்கைப் பெற, இரு தரப்பும் இலவசங்களை அள்ளிக்கொடுக்கிறார்கள். மண்டேலா யாருக்கு வாக்களித்தார் என்பது மீதிக் கதை.

தேர்தல் – அரசியல் களத்தை பகடி செய்து வசனங்களின் மூலம் ரசிகர்களையும் சிந்திக்க வைத்த இத்திரைப்படம் கடந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் தற்போது 2020ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிறந்த அறிமுக இயக்குனர், சிறந்த வசனம் என இப்படம் இரண்டு விருதுகளை குவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் யோகிபாபு,

தேசியவிருது என்பது மிகமிக முக்கியமான ஒன்று. ‘மண்டேலா’ படத்திற்கு  சிறந்த அறிமுக இயக்குனர், சிறந்த வசனம் என இரண்டு விருதுகள் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இயக்குனர் மடோன் அஸ்வின் சிந்தனைக்கு இந்த விருது மிகமிக சரியான விருதாக இருக்கும். இப்படம் பெரிய வெற்றிப்படமாக அமையும் என நம்பினோம், தற்போது அது நடந்திருக்கிறது என அவர் தெரிவித்தார்.

  • க.சீனிவாசன்
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.