திண்டுக்கல் லியோனி மகன் நடிக்கும் புதிய படம்: போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி

Published On:

| By Selvam

பிரபல நகைச்சுவை பட்டிமன்ற நடுவர், மேடைப் பேச்சாளர், இலக்கிய சொற்பொழிவாளர் என அனைவராலும் அறியப்பட்டவர் திண்டுக்கல் ஐ.லியோனி. இவர் தற்போது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக உள்ளார். இவரது மகன் லியோ சிவக்குமார் 2023 ஆம் ஆண்டு வெளியான அழகிய கண்ணே  திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார்.

இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது “மாண்புமிகு பறை” என்ற புதிய படத்தில் லியோ சிவகுமார் நடித்திருக்கிறார் . எஸ். விஜய் சுகுமார் இயக்க, சியா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது.

சுபா மற்றும் சுரேஷ் ராம் படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி இருக்கிறார்கள். கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்ய, தேனிசைத் தென்றல் தேவா இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். “மாண்புமிகு பறை” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.

லியோ சிவகுமார் நடித்த அழகிய கண்ணே திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாண்புமிகு பறை படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், கூடிய விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘கடைசி 11 பந்தில் 6 விக்கெட்’: இந்திய அணியின் மோசமான ஆட்டம்

இங்கிலாந்து: மாணவர் விசாவில் இனி குடும்பத்தினருக்கு அனுமதியில்லை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share