கிச்சன் கீர்த்தனா: மணத்தக்காளி வற்றல் குழம்பு

Published On:

| By Selvam

Manathakkali Vathal Kuzhambu Recipe

பாரம்பர்ய ருசிக்கு பெயர் பெற்றது வற்றல் குழம்புகள். அதுவும் மணத்தக்காளி வற்றல் குழம்பு என்றால் கூடுதலாக சாப்பிட தோன்றும். அப்படிப்பட்ட வற்றல் குழம்பை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்குச் செய்து பரிமாற இந்த ரெசிப்பி உதவும்.

என்ன தேவை?

சின்ன வெங்காயம் – 50 கிராம்
பூண்டு – 15 பல்
புளி – பெரிய எலுமிச்சை அளவு
மணத்தக்காளி வற்றல் – 5 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
உளுந்து – அரை டீஸ்பூன்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

அரைக்க:

காய்ந்த மிளகாய் – 5
மல்லி (தனியா) – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
மிளகு – ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1

எப்படிச் செய்வது?

அரைக்க கொடுத்துள்ளவற்றை எல்லாம் வெறும் வாணலியில் வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். மணத்தக்காளி வற்றல், வெள்ளைப்பூண்டை எண்ணெயில் தனித்தனியே வதக்கி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்து, வெந்தயம் சேர்த்து தாளிக்கவும். இத்துடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, கரைத்த புளித்தண்ணீர் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு, அரைத்த கலவை, உப்பு சேர்க்கவும். கலவையின் பச்சை வாசனை போனதும், வதக்கிய மணத்தக்காளி வற்றல், பூண்டு சேர்த்து கொதிக்கவிடவும். பூண்டு நன்றாக வெந்து குழம்பு கொஞ்சம் கெட்டியானதும் இறக்கிப் பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : மைசூர் ரசம்

கிச்சன் கீர்த்தனா: மைசூர் போண்டா

ஜூலை 28… அமெரிக்கா புறப்படுகிறார் ஸ்டாலின்

அன்றே கணித்தார் தமிழிசை : அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share