கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் காதல் மனைவி மற்றொரு இளைஞருடன் தனிமையில் இருந்ததை கண்டதால் கொதித்த கணவர், அந்த பெண்ணின் தலையை துண்டித்தார். பின்னர், துண்டித்த தலையுடன் போலீசில் அவர் சரணடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Man Surrenders to Police with Severed Head of His Wife in Bengaluru
பெங்களூரு புறநகர் பகுதியான ஆனேக்கல் வட்டம், காச்சநாயக்கனஹள்ளியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 28). பொம்மசந்திராவில் தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாகப் பணிபுரிந்து வருகிறார். ஹெப்பகோடி பகுதியைச் சேர்ந்த மானஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சங்கர். இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.
கணவர் சங்கர் தொழிற்சாலைக்கு செல்லும் நேரத்தில் மானஷா, வேறொரு இளைஞருடன் தனிமையில் இருந்து வந்துள்ளார். காதல் மனைவி மானஷா வேறு ஒருவருடன் படுக்கையில் இருப்பதை கடந்த ஜூன் 3-ந் தேதி இரவு நேரில் பார்த்து அதிர்ச்சியானார் சங்கர். இதனால் சங்கர்-மானஷா இடையே தகராறு ஏற்பட்டது. இதன் பின்னர் சங்கரை விட்டு மானஷா பிரிந்து சென்றுவிட்டார். ஆனாலும் சங்கர் வீட்டுக்கு வந்து மானஷா தகராறு செய்து வந்தாராம். இந்த தகராறின் போது அரிவாளால் மானஷா தலையை வெட்டி துண்டாக்கினாராம் சங்கர்.
பின்னர் துண்டித்த தலையை ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் வைத்து அருகே உள்ள சூர்யாநகர் காவல் நிலையத்தில் சரணடைந்தார் சங்கர். இதனையடுத்து சங்கர் மீது கொலை வழக்கைப் பதிவு செய்து கைது செய்த போலீசார், மானஷாவின் தலையில்லாத உடலையும் கைப்பற்றினர். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.