ADVERTISEMENT

சாதிச் சான்றிதழ் கேட்டு தீக்குளித்தவர் மனைவி தற்கொலை முயற்சி!

Published On:

| By Kalai

பழங்குடியின சாதிச் சான்றிதழ் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டவரின் மனைவியும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையம் அருகே ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

ADVERTISEMENT

விசாரணையில் அவர் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சேர்மாதூர் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பதும், மலைக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த இவர், சாதி சான்றிதழ் கேட்டு அரசு அலுவலகத்தில் பல முறை மனு அளித்தும் சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதும் தெரியவந்தது.

95 சதவீத தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வேல்முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக, நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தவேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்எம் சுப்ரமணியத்திடம், வழக்கறிஞர் சூரியபிரகாசம் கோரிக்கை விடுத்தார்.

ADVERTISEMENT

இதனை உயர் நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் நேற்று(அக்டோபர் 14)விசாரணைக்கு வந்தது.

அப்போது, பட்டியலினத்தை சேர்ந்த  வேல்முருகன் தனது மகனுக்கு சான்றிதழ் கேட்டு கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி விண்ணப்பித்ததாகவும், கள ஆய்வில் வேல்முருகன்  பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல என்பதால் விண்ணப்பம் செப்டம்பர் 26ஆம் தேதி நிராகரிக்கப்பட்டதாகவும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்தநிலையில் தீக்குளித்து உயிரிழந்த வேல்முருகனின் மனைவி சித்ராவும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அவருக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கலை.ரா

22% ஈரப்பத நெல் கொள்முதல்: தஞ்சையில் மத்தியக்குழு ஆய்வு!

தங்கம் வெள்ளி விலை குறைந்தது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share