கத்ரீனா கைஃபுக்கு கொலை மிரட்டல்: ஒருவர் கைது!

Published On:

| By srinivasan

பாலிவுட்டின் பிரபல தம்பதிகளான கத்ரீனா கைஃப், விக்கி கெளஷலுக்கு சமூக தளம் மூலமாக கொலை மிரட்டல் விட்ட நபரை மும்பை போலீஸார் இன்று (ஜூலை 25) கைது செய்தனர்.

பாலிவுட்டின் முன்னணி நடிகையும், பிரபல தம்பதிகளான கத்ரீனா கைஃப், விக்கி கெளஷல் இணையர் சமீபத்தில் மாலத்தீவில் எடுத்திருந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டனர்.

ADVERTISEMENT

இதனை தொடர்ந்து சமூக வலைதளம் வாயிலாக அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து விக்கி கெளஷல் புகாரின் பேரில் மும்பை சாண்டகுரூஸ் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சாண்டகுரூஸ் காவல்துறையினர் கத்ரீனா கைஃப், விக்கி கெளஷலுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள நபரை கைது செய்துள்ளனர். அந்த நபரின் பெயர் மன்விந்தர் சிங் என தெரிய வந்துள்ளது.

ADVERTISEMENT

அவர் கத்ரீனா கைஃப் ன் தீவிர ரசிகர் என்றும் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும் அதற்காகவே கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் தொந்தரவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

க.சீனிவாசன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share