ADVERTISEMENT

மம்மூட்டியின் மாஸ்… ராஜ் பி ஷெட்டியின் மிரட்டல்..”டர்போ” டிரைலர் எப்படி..?

Published On:

| By indhu

காதல் தி கோர், கண்ணூர் ஸ்குவாட், பிரம்மயுகம் என தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து அனைவரையும் பிரமிக்க வைத்தார் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்மூட்டி.

மூன்று பிளாக்பஸ்டர் படங்களை தொடர்ந்து அடுத்ததாக “டர்போ” என்ற திரைப்படத்தில் மம்மூட்டி நடித்திருக்கிறார். இந்த படத்தை நடிகர் மம்மூட்டி தனது “மம்மூட்டி கம்பெனி” நிறுவனத்தின் மூலம் தயாரித்தும் இருக்கிறார்.

ADVERTISEMENT

ஏற்கனவே நடிகர் மம்மூட்டியை வைத்து போக்கிரி ராஜா, மதுர ராஜா ஆகிய இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் வைசாக் தான் இந்த டர்போ படத்தை இயக்கி உள்ளார்.

டர்போ படத்திற்கு பிரபல மலையாள இயக்குநர் மிதுன் மானுவல் தாமஸ் திரைக்கதை எழுதி இருக்கிறார். சமீபத்தில் மிதுன் மேனுவல் தாமஸ் இயக்கத்தில் ஜெயராம் நடிப்பில் வெளியான Ozler திரைப்படத்தில் நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

மேலும் டர்போ படத்தில் நடிகர் மம்மூட்டிக்கு வில்லனாக பிரபல கன்னட இயக்குநரும் நடிகருமான ராஜ் பி ஷெட்டி நடித்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் டிரைலரை படக் குழு வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

இளமையான தோற்றத்தில் நடித்துள்ள மம்மூட்டி ஹீரோயிசம், காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்து விதமான எமோஷன்களையும் வெளிப்படுத்தும் ஒரு பக்கா கமர்சியல் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வில்லனாக வரும் ராஜ் பி ஷெட்டி கருப்பு உடையில் மிரட்டுகிறார்.

Turbo Malayalam Movie Official Trailer | Mammootty | Vysakh | Midhun Manuel Thomas |MammoottyKampany

டிரைலரின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை பரபரப்பான சண்டை காட்சிகள் நிறைந்து இருக்கிறது. டிரைலரை வைத்து பார்க்கும் போது இது வழக்கமான ஹீரோ வில்லன் இடையே இருக்கும் மோதல், குடும்ப செண்டிமெண்ட், காதல் காட்சிகள் என அனைத்தும் நிறைந்துள்ள ஒரு பக்கா கமர்சியல் படமாக தான் தெரிகிறது.

டர்போ படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுனில், நடிகை அஞ்சனா ஜெயப்பிரகாஷ், நடிகர் சபரீஷ் வர்மா, நடிகர் திலீஷ் போத்தன், நடிகர் கபீர் சிங் துஹான், நடிகர் ஜானி ஆண்டனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கூடிய விரைவில் நடிகர் மம்மூட்டியின் டர்போ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்திய பங்குச் சந்தை : இன்றைய நிலவரம்!

முதல்வரின் தனிச் செயலாளர் தினேஷ் குமாரின் தந்தை மறைவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share