நடிகர் மம்முட்டி தற்போது ரமலான் மாதம் என்பதால், சினிமாவில் நடிப்பதை விட்டு ஓய்வாக இருக்கிறார்.
இதையடுத்து, நேற்று (மார்ச் 16) சில மலையாள இணையதளங்கள் அவருக்கு புற்றுநோய் என்று செய்திகள் வெளியிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், மம்முட்டியின் செய்தி தொடர்பாளர் மிட்- டே நாளிதழுக்கு விளக்கம் கொடுத்துள்ளனர். Mammootty diagnosed with cancer?
விளக்கத்தில் கூறியிருப்பதாவது, “இது முற்றிலும் தவறான செய்தி. ரமலான் மாதம் என்பதால் நோன்பில் இருக்கிறார். நடிப்பில் இருந்தும் விலகியிருக்கிறார். நோன்பு முடிந்ததும் மோகன்லாலுடன் இணைந்து மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இந்த படத்துக்கு MMM என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஃபகத் பாசில் ,நயன்தாரா ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது, மம்முட்டிக்கு 73 வயதாகிறது. எனினும், இளம் வயது நடிகர்கள் போலவே அவர் காணப்படுவார். தமிழில் ‘மௌனம் சம்மதம்’, ‘தளபதி’ உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.