கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் மோடியை முன்னிலைப்படுத்தி பாஜக சார்பில் வெளியிடப்பட்ட ‘அச்சே தின்’ பாடலும் சரி, டெல்லி சட்ட சபை தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் வெளியான ‘5 சால் கெஜ்ரிவால்’ என்ற பாடலும் சரி தேர்தல் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி முதற்கட்ட சட்ட சபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, ‘தி திரிணாமுல் சாங்’ என்ற தலைப்பில் இசை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரவி வருகிறது.