மாமன்னன் தான் கடைசி படம்: அமைச்சர் உதயநிதி சினிமாவுக்கு டாடா

Published On:

| By Aara

சினிமாவில் பிசியாக நடித்துக்  கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலின், தற்போது அமைச்சராகிவிட்டதால் சினிமாவில் இனி நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறார்.

இன்று (டிசம்பர் 14)  காலை ஆளுநர் மாளிகையில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை  அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட  பிறகு  உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

ADVERTISEMENT

சினிமாவில் நடிப்பதைத் தொடர்வீர்களா என்ற கேள்விக்கு, “ஏன் இவ்வளவு கவலை” என்று சிரித்தபடியே அந்த கேள்வியை எதிர்கொண்ட உதயநிதி ஸ்டாலின்,

“இல்ல நடிக்கலை. கமல் சார் தயாரிப்புல ஒரு படம் நடிக்கறதா இருந்துச்சு.  இதை சொன்னவுடனே அவர்தான் முதலில் வாழ்த்தினார். அந்த படம்  பண்ணல, மாரி செல்வராஜ் ஆசைப்பட்ட மாதிரி மாமன்னன் தான் என் கடைசி படம்” என்று பதிலளித்தார் உதயநிதி ஸ்டாலின்.

ADVERTISEMENT

வேந்தன்

அமைச்சரானார் உதயநிதி

ADVERTISEMENT

6ஆவது முறையாக இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share