ரிலாக்ஸ் டைம்: மல்பூரி!

Published On:

| By Balaji

காலையில் சாப்பிடாமல் அடம்பிடிக்கும் குழந்தைகள், ரிலாக்ஸ் டைமில் ஏதாவது வேண்டும் என்று கேட்பார்கள். அவர்கள் விரும்பி சாப்பிட எளிதாகச் செய்யக்கூடிய சுவையான இந்த மல்பூரி செய்து கொடுத்து அசத்துங்கள். .

**எப்படிச் செய்வது?**

ADVERTISEMENT

இரண்டு கப் மைதா மாவு, அரை கப் அரிசி மாவு, ஒரு சிட்டிகை சோடா உப்பு மூன்றையும் ஒன்றாகக் கலந்து ஒரு கப் தயிர் சேர்த்து, பணியார மாவு போல் கரைக்கவும். இரண்டு கப் சர்க்கரையில் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, அரை டீஸ்பூன் கேசரி பவுடர் சேர்த்து கம்பிப் பதமாக பாகு தயாரித்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், கரைத்து வைத்திருக்கும் மாவை ஒரு கரண்டியால் எடுத்து ஊற்றி, வெந்ததும் எடுத்து சர்க்கரைப்பாகில் போட்டு பாகு குடித்ததும் எடுத்து வைக்கவும். எல்லோரும் விரும்பும் மல்பூரி எளிதில் தயார்.

**சிறப்பு**

ADVERTISEMENT

இதை பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கும் ஸ்நாக்ஸாகக் கொடுத்து அனுப்பலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share