மெயில் ஐடி இருக்கா? வாட்ஸ்ஆப் லாக்இன் செய்யலாம்!

Published On:

| By Selvam

வாட்ஸ்ஆப் பயன்படுத்தவோ அல்லது புதிய மொபைலில் லாக்இன் செய்யவோ மொபைல் நம்பர் என்பது அவசியமான ஒன்று. மொபைல் நம்பர் இல்லாமல் பயன்படுத்த முடியாது. இதனால் பல நேரங்களில் இன்டர்நெட் பிரச்சனை போன்ற தடங்கல்களால் பயனாளர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மெட்டா நிறுவனம் மொபைல் நம்பர் இல்லாமல் மெயில் ஐடியைக் கொண்டு லாக்இன் செய்வதற்கான சோதனையை மேற்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT

வாட்ஸ்ஆப் என்பது அனைவரது வாழ்க்கையிலும் மறுக்கமுடியாத ஓர் அங்கமாக திகழ்ந்து வருகிறது. மெட்டா நிறுவனமானது வாட்ஸ்ஆப்பில் பல்வேறு அப்டேட்களை செய்து வருகிறது. அதில் எடிட், டெலிட் எவ்ரிஒன், டிஸ்அப்பியரிங் ஆப்ஷன் போன்றவை பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்றே சொல்லலாம்.

ADVERTISEMENT

புதிய மொபைல் போன் மாற்றும் போது அதில் சிம் கார்டு போட முடியாத நிலை ஏற்பட்டால் இமெயில் வெரிபிகேஷன் முறை பயனுள்ளதாக இருக்கும்.

ADVERTISEMENT

வெப்பீட்டா இன்போவில் இருந்து கிடைத்த தகவலின்படி ஆன்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களின் பீட்டா வெர்சனில் மொபைல் நம்பர், ஓடிபி, எஸ்.எம்.எஸ் போன்ற முறைகளில் லாக்இன் செய்வதற்கு பதிலாக இ-மெயில் வெரிபிகேஷன் ஆப்ஷனை சோதனை செய்து வருகிறது மெட்டா.

இமெயில் வெரிபிகேஷன் ஆனது அக்கவுன்ட் செக்சன் (Account Section) பகுதியில் கொடுக்கப்படும். வாட்ஸ்ஆப் அக்கவுன்ட் உடன் இமெயில் ஐடியை இணைத்து பயன்படுத்தலாம்.

இந்த இமெயில் வெரிபிகேஷன் முறை விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-பவித்ரா பலராமன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆம்னி பேருந்துகளுக்கு எச்சரிக்கை!

மசோதாக்களை ஆளுநர்கள் இழுத்தடிப்பது ஏன்? – உச்சநீதிமன்றம் கேள்வி!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share