எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக மஹூவா மொய்த்ரா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜனவரி 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மஹூவா மொய்த்ரா, மக்களவையில் அதானி குழுமத்திற்கு எதிராக கேள்வி எழுப்ப தொழிலதிபதிபர் ஹிராநந்தானியிடமிருந்து லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தி, டிசம்பர் 8-ஆம் தேதி மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து மஹூவா மொய்த்ராவை எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக மஹூவா மொய்த்ரா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என் பாட்டி அடங்கிய அமர்வில் இன்று (டிசம்பர் 15) விசாரணைக்கு வந்தது. மஹூவா மொய்த்ரா தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனுசிங்வி ஆஜரானார்.
அப்போது நீதிபதி சஞ்சீவ் கண்ணா, “வழக்கு தொடர்பான கோப்புகள் இன்று காலை தான் எங்களுக்கு கிடைத்தது. அதனால் முழுமையாக ஆய்வு செய்ய முடியவில்லை. வழக்கின் விசாரணையை ஜனவரி 3 அல்லது 4-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளலாமா” என்று கேள்வி எழுப்பினார்.
மனுதாரர் தரப்பில் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஜனவரி 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“எடப்பாடி பழனிசாமியை ஆஜராக சொல்லுங்கள்” : சென்னை உயர் நீதிமன்றம்!
கட்சி பணி, மாற்று அரசியல்: பிரேமலதாவுக்கு ஈபிஎஸ் அண்ணாமலை வாழ்த்து!