தெலுங்கு சினிமாவில் பல மாஸ் ஆக்சன் வெற்றி படங்களை இயக்கியவர் த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ். தற்போது இவரது இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ள படம் “குண்டூர் காரம்”.
இந்த படத்தில் நடிகர் மகேஷ்பாபு உடன் இணைந்து ஶ்ரீ லீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
“குண்டூர் காரம்” படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும், மகேஷ் பாபு ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் பல மாஸ் சீன்கள் இருப்பதால் இப்போது வரை பாக்ஸ் ஆபிஸ் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை.
குண்டூர் காரம் படத்தில் மகேஷ் பாபு பீடி பிடிக்கும் காட்சிகள் அதிகமாக இருப்பதால் மகேஷ் பாபுவை பலரும் விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.
இதற்கு விளக்கம் அளித்த மகேஷ் பாபு, “குண்டூர் காரம் திரைப்படத்தில் நான் பிடித்தது வழக்கமான பீடி கிடையாது. அது லவங்க இலைகளால் செய்யப்பட்ட ஆயுர்வேத பீடி. முதல்முறை ஒரிஜினல் பீடி பயன்படுத்திய சிறிது நேரத்தில் தலைவலி வந்துவிட்டது. பின்னர் தான் இந்த ஆயுர்வேத பீடியை கொடுத்தார்கள். அது நன்றாக இருந்ததால் படம் முழுவதும் பயன்படுத்தினோம். நான் புகைப்பிடிக்கவும் மாட்டேன், அதனை ஊக்குவிக்கவும் மாட்டேன்” என்று கூறினார்.
மகேஷ் பாபு விளக்கம் கொடுத்தாலும், அவர் செய்தது தவறு என்று தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அவரை விமர்சித்து வருகின்றனர்.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாலமேடு ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர் பிரபாகரனுக்கு நிஸான் கார்!