மகாவிஷ்ணு அறக்கட்டளையில் சோதனை : முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

Published On:

| By christopher

Mahavishnu Foundation raid: Important documents seized!

மகாவிஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளையில் இன்று (செப்டம்பர் 12) நடத்திய சோதனையில் ஹார்ட் டிஸ்க், லேப்டாப் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளி ஆசிரியரை அவமதித்து பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மகாவிஷ்ணுவை கைது செய்த சைதாப்பேட்டை போலீசார்  6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

அவரை நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், 3 நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

அதனையடுத்து நேற்று இரவு 11 மணியளவில் சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் இருந்து மகாவிஷ்ணுவை வேனில் ஏற்றி திருப்பூருக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு திருப்பூர் குளத்துப்பாளையத்தில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளைக்கு மகாவிஷ்ணுவை அழைத்து சென்ற சைதாப்பேட்டை போலீசார், ஒவ்வொரு அறையாக சோதனையிட்டனர்.

அப்போது அறக்கட்டளைக்கு வந்த நன்கொடை வசூல், வெளிநாடுகளில் உள்ள கிளைகள், குருவின் கருணை என்ற பெயரில் அவர் விற்பனை செய்து வரும் பொருட்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அங்கிருந்து ஹார்ட் டிஸ்க், லேப்டாப் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பழங்கரை விஏஓ தங்கராஜ் முன்னிலையில் கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

58 ரன்கள்தான் தேவை… வங்கதேச தொடரில் விராட் படைக்க போகும் வரலாற்று சாதனை!

சுயமரியாதையை காத்த ராஜஸ்தான் ராயல்ஸ்… ‘கோச்’ டிராவிட் முடிவின் பின்னணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share