ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை வந்த மகாவிஷ்ணுவிடம் விமான நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவாற்றி, அதை தட்டிக்கேட்ட ஆசிரியர் சங்கரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் பரம்பொருள் அறக்கட்டளையைச் சேர்ந்த மகா விஷ்ணு.
இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “என் ஏரியாவுக்குள் வந்து எங்கள் ஆசிரியரை அவமதித்த மகாவிஷ்ணுவை சும்மா விடமாட்டேன்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அனைத்து உலக மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மகாவிஷ்ணு மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
திருப்பூர் குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளைக்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவில் இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து அங்கிருந்தவாறு மகாவிஷ்ணு வீடியோ ஒன்றை வெளியிட்டார். நான் நாளை(இன்று) மதியம் சென்னை விமான நிலையத்துக்கு வருவேன். இந்த சர்ச்சை குறித்து விளக்கமளிப்பேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 7) சென்னை விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.
மகாவிஷ்ணு வருவதற்கு முன்னதாகவே சைதாப்பேட்டை உதவி காவல் ஆணையர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர்.
பிறகு சென்னை விமான நிலையத்துக்கு வந்த மகாவிஷ்ணுவிடம் அங்கு வைத்து விசாரணை நடத்திய போலீசார் சிறிது நேரத்தில் அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
புதுச்சேரி மணக்குள விநாயகருக்கு அமெரிக்க வைரத்தில் அலங்காரம்!
வெறுத்து ஒதுக்கிய பெயர்… தவிர்க்க முடியாததாக மாறியது எப்படி? – மம்முட்டிக்கு 73 வயது!