மகா சிவராத்திரி : ஈஷா வந்தடைந்தார் அமித் ஷா

Published On:

| By vanangamudi

ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் இன்று (பிப்ரவரி 26) வருகைத் தந்துள்ளனர். Amit Shah arrives at Isha

கோவை ஈஷா யோகா மையத்தில் 31-ஆவது மகா சிவராத்திரி விழா இன்று (பிப்ரவரி 26) மிக விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா, மூன்று மாநில ஆளுநர்கள், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மற்றும் வெளி மாநில, நாடுகளில் இருந்து விஐபிகள் கலந்துகொள்கின்றனர்.

இதைமுன்னிட்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (பிப்ரவரி 25) டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். இன்று கோவையில் நடைபெற்ற பாஜக அலுவலக திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அதன்பின் ரேடிசான் ப்ளூ ஹோட்டலில் இருந்து கோவை விமான நிலையம் வந்த அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈஷா யோகா மையத்துக்கு வந்தடைந்தார்.

முன்னதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈஷா வந்தடைந்தார்.

மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், மகாராஷ்டிரா மண் மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சஞ்சய் ரதோடு உள்ளிட்டோரும் மகா சிவாராத்திரி விழாவில் கலந்துகொள்கின்றனர். Amit Shah arrives at Isha

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share