மகாராஷ்டிரா அமைச்சரவை: யார் யாருக்கு என்ன பொறுப்பு!

Published On:

| By Balaji

மகாராஷ்டிராவில் அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக உத்தவ் தாக்கரே பொறுப்பேற்ற ஒரு மாதத்துக்கு பிறகு நேற்று அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டது. அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்களுக்கு அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யரி இன்று ஒப்புதல் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மகாராஷ்டிரா துணை முதல்வரும், என்.சி.பி மூத்த தலைவருமான அஜித் பவாருக்கு நிதி மற்றும் திட்டமிடல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அவரது கட்சியைச் சேர்ந்த அனில் தேஷ்முக்கிற்கு மாநிலத்தின் உள்துறை அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டது.

முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு பொது நிர்வாகத் துறை, தகவல் மற்றும் தொழில்நுட்பம், சட்டம் மற்றும் நீதித்துறை ஆகிய பொறுப்புகள் ஒதுக்கப்பட்டன. உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவுக்கு சுற்றுலா, சுற்றுச்சூழல், ப்ரோட்டாகால் துறை ஒதுக்கப்பட்டன. சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நகர்ப்புற மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரத்துக்கு வருவாய் துறை ஒதுக்கப்பட்டுள்ளது, மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் அசோக் சவானுக்கு பொதுப்பணித் துறை ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் சிவசேனா எம்.எல்.ஏ.வான அப்துல் சத்தார், அமைச்சரவையில் தனக்கு முக்கிய பொறுப்பு வழங்கவில்லை என்று அதிருப்தியில் இருந்ததாகவும் இதனால் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் அப்படி எந்த ஒரு ராஜினாமா கடிதமும் வழங்கவில்லை என்று சிவசேனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இலாகாக்கள் ஒதுக்கப்பட்டதில் மாநிலத்தில் சில காங்கிரஸ் தலைவர்களும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். காங்கிரஸ் எம்,எல்.ஏவான கைலாஷ் கோரந்தியலும் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். தனது ஆதரவாளர்களுடன் அமைச்சரவையில் உள்ள அனைத்து கட்சி பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர், தனக்கு எந்த ஒரு இலாகாவும் ஒதுக்கப்படாமல் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share