மகாராஷ்டிரா மாநிலத்தில் சுரானா ஜூவல்லர்ஸ் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.26 கோடி ரொக்கத்தை கைப்பற்றினர்.
வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில், மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் கனடா நகர் பகுதியில் இயங்கி வரும் சுரானா ஜூவல்லர்ஸ் உரிமையாளர் மற்றும் அவரது பினாமி நிறுவனமான மகாலட்சுமி பில்டர்ஸ் ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (மே 26) காலை சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது பணப்பரிவர்த்தனைகள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சோதனையின் முடிவில் கணக்கில் வராத ரூ.26 கோடி ரொக்கம் மற்றும் ரூ.90 கோடி மதிப்பிலான சொத்துக்களின் ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
ரூபாய் நோட்டுகளை எண்ண பல மணி நேரங்கள் ஆனதாகவும், ஃபிரிட்ஜில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பணத்தை ப்ரிட்ஜை உடைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாகவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வாரங்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக கடந்த மே 16-ஆம் தேதி நாண்டட் பகுதியில் நிதி நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் ரூ.14 கோடி ரொக்கம், 8 கிலோ தங்கம் உள்பட ரூ.170 கோடி மதிப்பிலான கணக்கில் வராத சொத்துக்களை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…