மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு!

Published On:

| By Aara

மகாராஷ்டிரா மாநில  சட்டப்பேரவைத் தேர்தல் வரும்  நவம்பர் 20-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.  ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத்  தேர்தல் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும்.  இந்த இரு மாநில தேர்தல்  முடிவுகள் நவம்பர் 23-ஆம் தேதி அறிவிக்கப்படும்.

இதை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று (அக்டோபர் 15) டெல்லியில் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான  கூட்டணி அரசு ஆட்சி செய்து வருகிறது. சிவசேனாவையும், தேசியவாத காங்கிரசையும் உடைத்து அதன் பிரிவுகளை வைத்து பாஜக ஆட்சி நடத்தி வருகிறது.  மகாராஷ்டிராவில் 288 இடங்கள் உள்ளன.

மகாராஷ்டிரா

ADVERTISEMENT

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் நாள் -அக்டோபர் 22

வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் -அக்டோபர் 29

ADVERTISEMENT

மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் நாள் -அக்டோபர் 30

வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள்- நவம்பர் 4

தேர்தல் –  நவம்பர் 20

வாக்கு எண்ணிக்கை -நவம்பர் 23

 

ஜார்க்கண்ட்  (81 தொகுதிகள் இரு கட்டத் தேர்தல்)

 

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் நாள் -அக்டோபர் 18, 22 

வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி தேதி – அக்டோபர் 25, அக்டோபர் 29

மனுக்கள் பரிசீலனை- அக்டோபர் 28, 30

வேட்பு மனுக்கள் திரும்பப் பெற கடைசி நாள்- அக்டோபர் 30, நவம்பர் 1

வாக்குப் பதிவு – நவம்பர் 13, நவம்பர் 20

வாக்கு எண்ணிக்கை -நவம்பர் 23

ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் அடுத்த கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஹரியானா மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று பாஜக வரலாறு படைத்தது. ஜம்மு காஷ்மீர் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் மகாராஷ்டிர, ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு தேசிய அரசியலில் கவனம் பெற்றுள்ளது.

வேந்தன்

நாய்… மாடு… மனிதர்கள்… இன்னும் எத்தனை உயிர்? : கவனிக்குமா மின்சார வாரியம்?

அதிமுகவில் களைகள் நீக்கம்… பகைவர்கள் கட்சிக்கு வேண்டாம்: தொண்டர்களுக்கு எடப்பாடி கடிதம்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share