முதல் வார வசூலில் மகுடம் சூடிய மகாராஜா!

Published On:

| By christopher

Maharaja crowned in the first week collection of 2024

நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மகாராஜா’ திரைப்படம் 3 நாட்களில் 32.6 கோடி ரூபாய்வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தனது அதிகாரபூர்வ X தளத்தில் அறிவித்துள்ளது.

இதன் மூலம் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து வெளியான படங்களில் முதல் மூன்று நாட்களில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் மகாராஜா என்பதுடன் அதிக மொத்த வசூல் செய்த படமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

2024 ஜனவரி முதல் கடந்த வாரம் வரை தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட நேரடி தமிழ் திரைப்படங்கள் வெளியானது.

கேப்டன் மில்லர், அயலான், மிஷன்சேப்டர் 1, சிங்கப்பூர் சலூன், புளுஸ்டார், வடக்குப்பட்டி ராமசாமி, லால்சலாம், சைரன், ரோமியோ, ரத்னம், அரண்மனை-4, ஸ்டார், நான் தான் இங்கு கிங்கு, கருடன் என நட்சத்திர அந்தஸ்தும், வணிக மதிப்பும் உள்ள மேற்குறிப்பிட்ட படங்கள் வெளியானபோதும் திரையரங்குகளில் லாபகரமான, கல்லா கட்டிய படங்கள் வரிசையில் அரண்மனை – 4, ஸ்டார், கருடன் ஆகிய படங்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளன.

ADVERTISEMENT

சர்வசாதாரணமாக 50 கோடி, 100 கோடிரூபாய் என பாக்ஸ் ஆபீசில் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வந்த தமிழ் சினிமாக்கள் கடந்த ஐந்து மாதங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியானாலும், 100 கோடி ரூபாய் மொத்த வசூலை தடுமாற்றத்துடன் கேப்டன் மில்லரும், இயல்பாக அரண்மனை – 4 என இரண்டு படங்கள் மட்டுமே செய்துள்ளன. கருடன் படம் 50 கோடி ரூபாய் வசூலை இரண்டாவது வாரத்தில் கடந்துள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 50வது படம் ‘மகாராஜா’ இந்தபடத்தை ’குரங்கு பொம்மை’ இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் மம்தா மோகன்தாஸ், அனுராஜ் காஷ்யப், நட்டி நடராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஜனீஷ் லோகநாத் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் கடந்த 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

Image

இந்த நிலையில் வெளியான மூன்று நாட்களில் ’மகாராஜா’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.32.6 கோடி வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு இதுவரை வெளியான தமிழ் திரைப்படங்களில் முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் அதிகம் மொத்த வசூல் செய்த படம் என்ற சாதனையை தனதாக்கி கொண்டுள்ளது மகராஜா.

இந்த வருடம் வெளியான படங்களில் அரண்மனை – 4, ஸ்டார், கருடன், மகாராஜா ஆகிய நான்கு படங்களுக்கு மட்டுமே தயாரிப்பு நிறுவனங்கள் மொத்த வசூலை வெளிப்படையாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இராமானுஜம்

”சொந்த மாநில மக்களை அகதிகளாக்கும் தமிழக அரசு” : டிடிவி தினகரன் கண்டனம்!

Stock Market : புதிய உச்சம் தொட்ட ஏர்டெல், மஹிந்திரா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share