உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகாகும்பமேளா ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் (பிப்ரவரி 26) மகாகும்பமேளா நிறைவடைய உள்ள நிலையில், திரிவேணி சங்கமத்தில் கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடியுள்ளனர். maha kumbh fire reunites
இந்த மகாகும்பமேளாவில் கலந்துகொள்வதற்காக இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் மக்கள் உத்தரபிரதேசம் நோக்கி படையெடுக்கின்றனர். இந்தநிலையில், மகாகும்பமேளாவில் பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்புத்துறை அதிகாரி சஞ்சீவ் குமார் சிங் 37 ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடன் படித்த கல்லூரி மாணவி ராஷ்மிகா குப்தாவை சந்தித்துள்ளார்.
இதுதொடர்பாக சஞ்சீவ் குமார் வெளியிட்ட வீடியோவில், “1988-ஆம் ஆண்டு நாங்கள் இருவரும் காலேஜில் படித்தோம். 37 ஆண்டுகளுக்கு பிறகு இவரை மகாகும்பமேளாவில் இன்று சந்தித்துள்ளேன். தற்போது லக்னோவில் உள்ள ஒரு கல்லூரியில் ராஷ்மிகா பேராசிரியராக பணிபுரிகிறார்” என்று உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.
ராஷ்மிகா கூறும்போது, “மகாகும்பமேளாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் நன்றாக செய்யப்பட்டுள்ளது. சஞ்சீவ் எங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தார். கல்லூரி படிக்கும்போது சஞ்சீவ் யாரிடமும் பெரிதாக பேசமாட்டார், மிகவும் அமைதியாக இருப்பார். ஆனால், இப்போது அவர் அப்படியில்லை. நான் சஞ்சீவை சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.
37 ஆண்டுகளுக்கு பிறகு கல்லூரி மாணவர்கள் கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. maha kumbh fire reunites