–யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
பொறுமையாக இருக்கவேண்டிய காலகட்டம். பணியிடத்தில் பாராட்டப்படுவீர்கள். அதேசமயம் திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம்.பிறரின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம்.
திட்டமிட்டு செயல்பட்டால், இடமாற்றம், உயர்வுகள் கைகூடிவரும். யாரிடமும் வீண் தர்க்கம் வேண்டாம். குடும்பத்தில் நிம்மதி நிலவ, வீண் குழப்பம் தவிருங்கள். மூன்றாம் நபர் தலையீட்டைக் குடும்பத்தில் அனுமதிக்க வேண்டாம். தம்பதியர் பரஸ்பரம் உடல்நலத்தில் அக்கறை செலுத்துங்கள். வாரிசுகளிடம் அதீதக் கண்டிப்பு வேண்டாம். ஆடை, ஆபரணம் சேரும். சுபகாரியங்களில் பெரியோர் ஆலோசனை கேளுங்கள்.
செய்யும் தொழிலில் வளர்ச்சி தொடர்ச்சியாகும். கூட்டுத் தொழிலில் நிதானம் முக்கியம். அரசுத் துறையினர் சீரான நன்மைகளைப் பெறுவீர்கள். பணிசார்ந்த விவரங்களை பிறரிடம் பகிர வேண்டாம்.
அரசியல் சார்ந்தவர்கள் அடக்கமாக இருந்தால் அநேக நன்மை கிட்டும். படைப்பாளிகள் திறமைக்கு உரிய உயர்வுகளை நிச்சயம் பெறுவீர்கள்.
மாணவர்கள் எதிர்காலத்துக்கான திட்டமிடலை கவனமாகச் செய்வது நல்லது.
வாகனப் பயணத்தில் லாகிரி வஸ்துவுக்கு இடம்தர வேண்டாம்.
அடிவயிறு, தொண்டை, கழுத்து, முதுகு உபாதைகள் வரலாம்.
துர்க்கை வழிபாடு செழிப்பு சேர்க்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
என்ன அழகு எத்தனை அழகு… மாடல்களுக்கு சவால் விட்ட சர்ச்சை குத்துச்சண்டை வீராங்கனை!
யு/ஏ சான்றிதழ் கிடைச்சாச்சு… ரிலீஸுக்கு ரெடியாகும் ‘வணங்கான்’!