தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. magalir urimai thogai scheme
இன்று (மார்ச் 28) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை – திட்டம், வளர்ச்சி, மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை உள்ளிட்டவை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
“இந்தியாவே திரும்பிப்பார்க்கும் வகையில் அமைந்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதம்தோறும் ரூ.1000 பெற்று 1.16 கோடி மகளிர் பயன்பெற்று வருகின்றனர்.
கடந்த 19 மாதங்களில் 21 ஆயிரத்து 657 கோடி ரூபாய் உரிமைத்தொகையாக மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இதுவரை உரிமைத்தொகை பெற்றிடாத தகுதி வாய்ந்த மகளிருக்கு, புதிதாக விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று சட்டப்பேரவையில் அதிமுக பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், “மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தகுதிகள் அதிகமாகவும், விதிகள் கடுமையாகவும் உள்ளன.
ஏராளமான பெண்கள் உரிமைத் தொகையை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பெண்கள் அதிகளவில் பயன்பெறும் வகையில் உரிமைத் தொகை பெறுவதற்கான கெடுபிடிகளை தளர்த்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
இந்தநிலையில் விரைவில் புதியவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். magalir urimai thogai scheme