மாதந்தோறும் மகளிர் உரிமை தொகை எப்போது?

Published On:

| By Monisha

magalir urimai thogai credicted

வங்கிக் கணக்கில் மாதந்தோறும் 15 ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் வாக்குறுதியாக குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக அறிவித்தது. இதனையடுத்து தகுதியுடைய விண்ணப்பங்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்தவர்களில் 1.06 கோடி விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடர்ந்து தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 15) மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் இன்று தொடங்கி வைத்தார்.

மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரின் வங்கிக் கணக்குகளுக்கு நேற்றே ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது. நேற்று வரவு வைக்கப்படாத வங்கி கணக்குகளுக்கும் இன்று வரவு வைக்கப்பட்டது.

இந்நிலையில் மாதந்தோறும் 15 ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி சம்பளம் உள்ளிட்ட பரிவர்த்தனைகள் நடப்பதால் தொழில்நுட்ப பிரச்சனைகளைத் தடுப்பதற்காக 15 ஆம் தேதியில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோனிஷா

அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்: ஜெயக்குமார்

சனாதன பேச்சு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share