பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 16) வெளியான நிலையில், மதுரை பள்ளியில் பயின்ற இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண்களைப் பெற்று கவனத்தை ஈர்த்துள்ளனர். madurai twins get same mark in 10th exam result
தமிழகத்தில் கடந்த 2024-25 கல்வியாண்டில் மொத்தம் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். இந்த நிலையில் அவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது.
ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 93.80% என்ற நிலையில், வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதற்கிடையே மதுரை திருப்பாலைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவிகளான இரட்டையர்கள் ஒரே மதிப்பெண் பெற்று ஆச்சரியம் அளித்துள்ளனர்.

மதுரை :
மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள ஸ்ரீ சாரதா வித்யா வனம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இரட்டையர்களான மாய ஸ்ரீ (475) மற்றும் மகா ஸ்ரீ (475) இருவரும் ஒரே மாதிரி மொத்த மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 5 பாடங்களில் வெவ்வேறு மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் ஒட்டுமொத்தமாக இருவரும் ஒரே மொத்த மதிப்பெண் பெற்றது அவர்களது பெற்றோர் உட்பட பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

கோவை :
அதே போன்று கோவை ராமநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்த இரட்டை சகோதரிகளான கவிதா, கனிஹா இருவரும் பொதுத் தேர்வில் 474 என்ற ஒரே மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளனர்.

தஞ்சை :
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிச் சேர்ந்த இரட்டையர்கள் ஆதிசேசன், அபி ஸ்ரீவர்சன் இருவரும் 357 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 தேர்விலும் இப்படி தான்!
முன்னதாக, கடந்த 8ஆம் தேதி வெளியான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில் தூத்துக்குடி மாவட்டம் கோட்ஸ் நகர் பகுதியை சேர்ந்த பாலின் காருண்யா இவாஞ்சலின் சௌந்தர்யா என்ற இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண் (585) பெற்றது வியப்பில் ஆழ்த்தியது.

அவர்கள் கடந்த 2023ம் ஆண்டு நடந்த 10 வகுப்பு தேர்விலும் ஒரே மாதிரியாக 485 மதிப்பெண் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று வெளியான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் மதுரையைச் சேர்ந்த இரட்டை மாணவிகள் ஒரே மதிப்பெண் பெற்றது தற்போது பேசு பொருளாகியுள்ளது.