ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு!

Published On:

| By Selvam

madurai train accident relief

மதுரை சுற்றுலா ரயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 17-ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து சுற்றுலா ரயில் மூலம் தமிழகத்திற்கு 60-க்கும் மேற்பட்டோர் ஆன்மீக சுற்றுப்பயணம் வந்துள்ளனர். இவர்கள் ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு புனித தலங்களுக்கு சென்றுள்ளனர். நேற்று நாகர்கோவிலில் உள்ள பத்நாபசாமி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலை மதுரை வந்தடைந்துள்ளனர். ரயிலில் பயணித்தவர்கள் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தி சமைத்துள்ளனர். இதனால் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் தீ விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 9360552608, 8015681915 என்ற உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவைகளில் எந்தவித மாற்றமுமில்லை என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

செல்வம்

ரயில் தீ விபத்து: ஆளுநர் இரங்கல்!

மதுரை ரயில் தீ விபத்து: தெற்கு ரயில்வே விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share